வாணிபுத்தூர் பேரூராட்சியில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்


ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாணிபுத்தூர் பேரூராட்சியில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது .இதில் டி .என்.பாளையம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். முகாமில் முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டுமனை,அடுக்குமாடி குடியிருப்பு, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் வாணிப்புத்தூர் பேரூர் கழக செயலாளர் ரங்கநாதன், வாணிப்புத்தூர் முன்னாள் கவுன்சிலர் மினியப்பன்,  வாணிப்புத்தூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சரவணகுமார் சுகாதார மேற்பார்வையாளர் சேகர், கிராம நிர்வாக அலுவலர்கள் மகுடேஸ்வரன், சவேரியார், உட்பட பலர் கலந்து கொண்டனர்