விஜயகாந்த்தின் 68-வது பிறந்தநாளை பண்ணாரி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து கொண்டாடினர் 


தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த்தின் 68-வது பிறந்தநாளை சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்புப் பூஜைகள் நடத்தி கொண்டாடினர். தே.மு.தி.கா. தலைவர் விஜயகாந்த் அவர்களின் 68-வது பிறந்தநாளை 'வறுமை ஒழிப்பு தினமாக” ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் பல்லாண்டு வாழவேண்டும் என சத்தியமங்கலம் அருகே உள்ள அருள்மிகு பண்ணாரி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்தும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமனியும் மற்றும் ஒன்றியச் செயலாளர் சசிக்குமார் நகரச் செயலாளர் தரனிமுருகன் தொன்டர் அணி ராஜேந்திரன் என 100-க்ம் மேற்பட்ட தொன்டர்களும் மகளிர் அணியும், இளைஞர் அணி மற்றும் நம்பியூர் ஒன்றியம், பவானி ஒன்றியம், கோபி நகர ஒன்றியம் என அனைவரும்
கலந்துகொண்டனர்.