புதிய பாலம் திறப்பு விழா


   கோபி அருகே ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் கீழ்பவானி வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு  ஸ்மார்ட் கார்டுகளை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

    மாணவர்களுக்கு லேப்டாப்பிற்கு அடுத்து  டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுவரை அரசு பள்ளியில் ஆங்கில மொழி கற்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. அந்த கட்டணத்தை ரத்து செய்ததுடன் வசூலிக்கப்பட்ட கட்டணம் திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளியிலும் இரண்டு வார காலத்தில் பயோமெட்ரிக் கொண்டு வரப்படும். தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என பாட புத்தகத்தில் வந்துள்ளது, புத்தகத்தை தயாரித்தவர் தவறு தான். அதனால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதற்காக கண்காணிக்க குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்காணித்து வருகிறார்கள். 3000 ஆண்டு என்பது  தவறுதலாக 300 ஆண்டுகள் என அச்சடிக்கப்பட்டு விட்டது. புதிய கல்விக்கொள்கை குறித்து, கடந்து 26 ம்தேதி தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை தான் என்பதை  முதலமைச்சர் பிரதமரிடம் தெளிவாக கூறி உள்ளார். இதுகுறித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்கி உள்ளார். தமிழகத்தில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை தேர்வு நடைபெற்று தான் வருகிறது. அனைவரும் தேர்ச்சி பெற்று வருவதால் புதிய கல்வி கொள்கை குறித்ணகவலைப்பட தேவை இல்லை என்றார். நிகழ்ச்சியில் சிட்கோ முன்னாள் சேர்மன் சிந்து ரவிச்சந்திரன் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் எஸ் குழந்தை ராஜு, உதவி கோட்ட பொறியாளர் ரவி, உதவிப் பொறியாளர் எம்.ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.