ஒரு லட்சத்து எட்டு விநாயகர் சிலை : அகில பாரத இந்து மகா சபா கட்சி அறிவிப்பு


 

விநாயகர் சதுர்த்தி விழாவில் ஒரு லட்சத்து எட்டு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்போவநாக அகில பாரத இந்து மகா சபா கட்சி அறிவிப்பு. கோபியில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் டாக்டர்.ஏ.சுபாஸ் சுவாமிநாதன் தலைமையில் மாவட்ட தலைவர் கோடீஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாநிலத் தலைவர் சுபாஸ் சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது . ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா கட்சி சார்பில் வீடுதோறும் விநாயகர் என்ற அடிப்படையில் ஒரு அடி உயரமுள்ள ஒரு லட்சத்து எட்டு விநாயகர் சிலைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காமல் போதிய பாதுகாப்பு அளிக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதை வரவேற்பதாகவும் தமிழகத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வந்த தகவலைத்தொடர்ந்து காவல்துறையும், உளவுத்துறையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது வரவேற்கத் தக்கது என்றும். தீவிரவாதிகளை கைது செய்வதுடன் இது போன்று தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

Previous Post Next Post