பா.வெள்ளாள பாளையம் ஊராட்சியில் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம்


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட பா.வெள்ளாள பாளையம் ஊராட்சியில் மாண்புமிகு  முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அரசு அலுவலர்களிடம் கொடுத்தனர் , இதில் தோட்டக்கலை துறை அலுவலர் திவ்யா, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் வி.ஆர் வேலுமணி, வி.வி. ஜெயமூர்த்தி, ஊராட்சி செயலர் வி.நாகமணி  கிராம நிர்வாக அலுவலர் மோகனப்பிரியா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.