அம்பேத்கார் சிலையை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருநாவுக்கரசர்


 

அம்பேத்கார் சிலையை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். சென்னை  விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-  இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கப்பட்டவர். ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுக்காக உழைத்தவர். அவரது சிலை உடைத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. காட்டு மிராண்டித் தானமது. யார் என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.