திருப்பூர் மங்கலம் சாலை, ஆண்டிபாளையம்,  அணைப்பாளையம் தரைமட்ட பாலத்தினை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு 

திருப்புர் மாவட்டம், திருப்பூர் மங்கலம் சாலை, ஆண்டிபாளையம்,  அணைப்பாளையம்
தரைமட்ட பாலத்தினை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் :
தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்திலுள்ள நொய்யல் ஆற்றிற்கு அதிகப்படியான நீர் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக நேற்றைய தினம் வினாடிக்கு சுமார்  4650 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்றைய தினம் வினாடிக்கு சுமார் 1720 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுடிருக்கிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றிற்கு கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக உரிய முறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணை ஆகிய அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாய பெருங்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து திட்டத்தின் மூலம் அதிகளவில் தண்ணீர் சேமிக்க முடிகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெவித்துக்காள்கிறேன். தொடர்ந்து, நொய்யல் ஆற்றில் அதிகப்படியான நீர் வந்து கொண்டிருப்பதால் பொது மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஈஸ்வரன் கோவில் உயர்மட்ட பாலத்தினையும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது, தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன், வடக்கு  சட்டமன்ற உறுப்பினர்  கே.என்.விஜயகுமார், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் மாநகர காவல் துணை ஆணையர் இ.எஸ்.உமா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், வட்டாட்சியர்கள் மகேஷ்வரன் (திருப்பூர்  தெற்கு), ஜெயக்குமார் (திருப்பூர்  வடக்கு), அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.