பழனியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வட்ட கிளை சார்பாக நடைபெற்ற பன்னிரண்டாவது வட்ட மாநாடு 

பழனியில் உள்ள ஒன்றிய யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பழனி வட்ட கிளை சார்பாக 12 ஆவது வட்ட மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் தலைமையாக தலைவர் வேலுசாமி, வரவேற்புரையாக இணைச் செயலாளர் அய்யப்பன்,

தொடக்கவுரையாக மாவட்ட துணை தலைவர் மங்கள பாண்டியன் மற்றும் ரமேஷ் நாகராஜன் ஆகியோர் தலைமை ஏற்றனர் மாநாட்டில் பொறுப்பாளர்கள் கூறுகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உறுப்பினர்களின் நலனுக்காக மற்றும் பணி பாதுகாப்பிற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. மேலும் இச்சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் பல்வேறு பாதுகாப்பு நலத்திட்டங்கள் அரசின் மூலம் பெற்றுத் தந்துள்ளது என்று கூறினர். மேலும் மாநாட்டின் தீர்மானங்களாக பணிநிறைவு பெறும் நாளில் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் பழிவாங்கும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டதை வன்மையாக கண்டிக்கிறது என்றும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் போராடிய அரசு ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் நிர்வாகிகளை அழைத்து 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்பப்பட வேண்டும் எனவும் புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் உச்ச வரம்பின்றி ஒரு மாத சம்பளத்தை போனசாக அனைவருக்கும் வழங்க வேண்டும் எனவும் சத்துணவு,அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள்,கிராம உதவியாளர்கள், நூலகர்கள்,ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் எனவும் அனைத்து திருக்கோவில்களிலும் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் பணிநீக்க காலத்தில் இறந்து போன அரசு பணியாளர்கள் குடும்பத்துக்கு தகுதியான நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கவும் 41 மாதங்களை பணிக்காலமாக கருதி ஆணை வழங்கவும்  தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று பல்வேறு தீர்மானங்களை இம்மாநாட்டின் மூலம் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் ராஜசேகரன், கந்தசாமி,ராஜசேகர் ஸ்டீபன்,மனோகரன், தமிழ்ச் செல்வி,பிரபு, ராமசாமி,ஜீவா, லோகநாதன்,ஆறுமுகம், துரைராஜ்,மகாராஜா, சங்கரநாராயணன், குப்புசாமி,ராஜமாணிக்கம், உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இம் மாநாட்டின் நிறைவாக  துணைத் தலைவர் இளங்கோ நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.