அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து கண்களில் கருப்புத்துணிக்கட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து கண்களில் கருப்புத்துணிக்கட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து இன்று காலை கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இது குறித்து மாரிச்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்:- தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிந்து பணிபுரிந்துவரும் மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். மருத்துவமனையில் உடனடியாக எலும்பு முறிவு சிகிச்சைக்கு மருத்துவரை அனுகவேண்டும். மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின் தட்டுப்பாட்டை நீக்கவேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களின் நோயாளிகளிடம் லஞ்சம் பெறுவதை தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதற்கு பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.


Previous Post Next Post