அபிராமி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பொறுப்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினருக்கு அதிகாரி சான்றிதழ்களை வழங்கினார்


 

திண்டுக்கல் மாவட்ட அபிராமி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பொறுப்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினருக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சான்றிதழ்களை வழங்கினார். திண்டுக்கல் திருச்சி சாலையில் DD - 487 திண்டுக்கல் மாவட்ட அபிராமி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை  உள்ளது. இந்த சங்கத்திற்கான தலைவர் துணைத் தலைவர் மற்றும் இயக்குனர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மொத்தம் 15 இயக்குனர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைவராக அதிமுக முன்னாள் நகர கழக செயலாளர்  பாரதிமுருகனும் துணைத்தலைவராக ராஜனும் பொறுப்பேற்க உள்ளனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வழங்கினர் இதையடுத்து மண்டபத்திற்கு வெளியே அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.