சென்னை மடிப்பாக்கத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை துவக்கி வைத்தார்: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்


 


சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய திறப்பு விழாவில், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 


இதில் காஞ்சி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ., கே.பி.கந்தன், பரங்கிமலை ஒன்றியக் கழக செயலாளர் முன்னாள் ஒன்றியத் தலைவர் என்.சி. கிருஷ்ணன், மாவட்ட கழக துணைச் செயலாளர் அம்மன்.பி.வைரமுத்து,  மடிப்பாக்கம் 187வது வட்டக் கழக செயலாளர் முன்னாள் கார்த்திகேயபுரம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் என். தியாகராஜன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் இ.பொன்னுசாமி உமா தியாகராஜன், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகத்தினர், கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.