திட்டக்குடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்


 


திட்டக்குடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்பட வேண்டு என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் திட்டக்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், தமிமுன் அன்சாரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வருகிற 25-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர். கூட்டத்தில் வருகிற 25ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திரளாக மக்களைத் திரட்ட வேண்டும்.  திட்டக்குடியில் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும். தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி பேருந்துகள் அதிவேகமாக செல்வதை தடுப்பதற்கு துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். திட்டக்குடி பேரூராட்சியில்  அனைத்து வார்டுகளில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சுகாதார சீர்கேடு அடையாமல் இருப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கூட்டத்தில் நகர தலைவர் சலீம் ஹாஜியார், துணைத் தலைவர் அல்ஹாஜ் ஜான் பாஷா, நகர செயலாளர் அம்சா முகம்மது, துணைச் செயலாளர் சர்தார் , ஒன்றிய நிர்வாகி ஆட்டோ அமானுல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட உலமாக்கள் அணி பொருளாளர் நஜிருல்லாஷ் மிஸ்பாஹி நன்றி கூறினார்.