பழையபாளையம் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு

பழையபாளையம் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையபாளையம் கிராமத்தில் ஊராட்சிக்குச் சொந்தமான பழத்தோட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப் புத்திட்டத்தின் கீழ் பல வகையான மரக்கன்றுகள் நடும் பணியை கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் சரவணன், உதவிப்பொறியாளர் வேல்கண்ணன், ஊராட்சி செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மத்திய நீர் வளத்துறை ஆதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் முறைகள் பற்றி தொழிலாளார்களிடம் ஆலோசனை வழங்கினார்.