திட்டக்குடி தாலுக்கா கல்லூர் கிராமத்தில் புதிய  இந்தியன் வங்கி கிளை ஏடிஎம் திறப்பு

திட்டக்குடி தாலுக்கா கல்லூர் கிராமத்தில் புதிய  இந்தியன் வங்கி கிளை ஏடிஎம் திறப்பு விழா

 


 

கடலூர் மாவட்டம்  திட்டக்குடி தாலுக்கா  கால்லூர் கிராமத்திலுள்ள தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பில் இந்தியன் வங்கி கிளை ஏடிஎம் மையம் திறப்பு விழா நடைபெற்றது. 

விழாவிற்கு வட்டார மேலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கல்லூர் வங்கியின் மேலாளர் மகேஸ்வரி மற்றும் அடரி அருணஜடேசன் தலைமை தாங்கினார்.  கரூர் வைஸ்யா வங்கியின் மேலாளர் சுரேஷ் வேப்பூர் இந்தியன்  வங்கி மேலாளர் செல்வி கனிமொழி ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ் ஆர் சங்கர் அவர்கள் கலந்துகொண்டு ஏடிஎம் மையத்தை திறந்து வைத்து பின் குத்துவிளக்கு ஏற்றி பணம் எடுக்கும் வசதியும் தொடங்கிவைத்தார். பின் வங்கியில் குறைந்த சதவீதம் வட்டியில் விவசாயிகளுக்கு லோன் மற்றும் நகை கடன் வழங்கப் படுகிறது என்று பேசினார். இறுதியில் கிராமாலயா மைக்ரோ பைனான்ஸ் மேலாளர் ரமேஷ் மற்றும் மனோகரன் நன்றி கூறினார்கள். இதில் வங்கி ஊழியர்கள் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.