சேலம் கோட்டம் சரக்கு பார்சல் மூலம் 5 மாதங்களில் ரூ.6.95 கோடி வருவாய் -முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன்

சேலம் ரயில்வே கோட்டம் சரக்கு பார்சல் மூலம் கடந்த 5 மாதங்களில் ரூ.6.95 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.



ஈரோட்டில் தொழில் நிறுவன கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் 850 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் சேலம் ரயில்வே சார்பில் ஒரு அரங்கும் நிறுவப்பட்டுள்ளது. இந்த தொழில் நிறுவன கண்காட்சியை சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் கூறியது:
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 32 ரயில் நிலையங்களில் பார்சல் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கரூர், மேட்டுப்பாளையம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களாகும்.
ரயில்களில் பார்சல்களை முன்பதிவு செய்து எடுத்து செல்ல நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த பார்சல் குறுகிய தூரம், நீண்ட தொலைவு செல்லும் ரயில்களில் எடுத்து செல்லப்படுகிறது.
அதேபோல வாடிக்கையாளர்கள் சுமார் 23 டன்களுக்கு அதிகமாக உள்ள சரக்குகளை எடுத்து செல்ல ரயில் நிலைய பார்சல் அலுவலகங்களை அணுகலாம். இதுதவிர 468 டன்களுக்கு மேல் சரக்குகளை எடுத்து செல்லும் வாடிக்கையாளர்களின் வசதிக்கு தனியாக சரக்கு ரயில் இயக்கப்படுகிறது.  



சேலம் ரயில்வே கோட்டம் கடந்த 5 மாதங்களில் சரக்கு பார்சல் மூலம் ரூ.6.95 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் மேற்பார்வையில் வணிக நடவடிக்கைகள் சிறப்பாக கையாளப்பட்டு வருகிறது.
ரயில்களில் பார்சல்களை எடுத்து செல்ல விரும்பும் வாடிக்கையாளர்கள், தொழில் நிறுவனங்கள், தொழில் அமைப்புகள் அருகில் உள்ள ரயில் நிலையங்களை அணுகி பயன் பெறலாம். சேலம் 0427-2448163, திருப்பூர் 9600956238, 9600956237, ஈரோடு 0424-2284988, கரூர்-8903119832, கோவை-8015572448, மேட்டுப்பாளையம்-8754416967 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்


Previous Post Next Post