அரசின் நல திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்ல முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேண்டுகோள்


திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக., சார்பில், அவினாசி வடக்கு ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், சேவூர் சிவசக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.இந்த கூட்டத்துக்கு, அவைத்தலைவர் பழனிசாமி , அவினாசி வடக்கு ஒன்றிய  செயலாளர் சேவூர் வேலுசாமி, முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:


என்னை பொருத்த மட்டிலும் மாண்புமிகு இதயதெய்வம் நம்மை விட்டு மறைந்தாலும் நம் இதயங்களில் குடிகொண்டு இருக்கக்கூடிய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமக்கு உள்ளங்களில் வசித்து வருகிறார்.   தமிழகத்திலே   அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்  ஒரு முன்னோடி இயக்கம் என்ற அளவில் இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கமாக உருவாகி உள்ளது.இன்றைக்கு வேலை இல்லாத , ஏழை எளிய மக்களுக்கு  வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள் தமிழ்நாடு முழுக்க பசுமை வீடுகள் கட்டித்தந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அவிநாசி அத்திக்கடவு திட்டத்தையும் நமது கழக ஆட்சி தான் நிறைவேற்றி தந்துள்ளது. இந்த பகுதியில், இன்றைக்கு பல்வேறு நிதியின் மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற  நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எடுத்துச் சொல்லி அவிநாசி அரசு கல்லூரி திறந்து வைத்திருக்கிறோம். இப்படி பல்வேறு திட்டங்கள்,  கிட்டத்தட்ட  2000 கோடி ரூபாய்க்கு மேல அவிநாசி தொகுதிகளை மட்டுமே நம்முடைய பணிகள் செய்து கொண்டிருக்கிறோம்.  இதெல்லாம் மக்களுக்கு நாம் போய் சொல்வதே இல்லை.   கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஒரு பொய்யான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டார்கள்.   இன்றைக்கு தமிழ்நாட்டில் நமது அரசு தான் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது.  இதையெல்லாம் நான் மக்களிடத்தில் முழுமையாக மக்கள் மனதில் பதியக் கூடிய அளவில் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் தான் படிப்படியாக முன்னேறி அமைச்சர் பதவி வரை வரலாம். முதலமைச்சராக கூட இன்றைக்கு நம்முடைய சாதாரண தொண்டனாக, கிளைச் செயலாளர்கள் இருந்து பணியாற்றிய  அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தான் இருந்து நல்ல பா திட்டங்களை தந்து இருக்கிறார். சாதாரண ஒரு  தொண்டன் கூட முதலமைச்சராக கூடிய ஒரு தகுதி படைத்த இயக்கம் அண்ணா திமுக. அடுத்து வரும்   உள்ளாட்சித் தேர்தலில் போட்டி இல்லாமல் நிர்வாகிகளை தேர்வு செய்து அவரது வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையாக பாடுபடும் நிலையை உருவாக்க வேண்டும்.  புரடசித்தலைவி அம்மா அவர்கள் அரசு கேபிள் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். கடந்த கால ஆட்சியில் உருவாக்கப்பட்ட சாதாரண குடும்பத்துல இருக்கிற கொடுக்க கூட 70 ரூபாய் கொடுத்து டிவி பாத்திடிருந்தாங்க.   அந்த நிலை மாறி செட்டாப் பாக்ஸ் என்கின்ற ஒரு முறையை  மத்திய அரசின் மூலம் கொண்டு வந்தார்க. அதில் 300 ரூபாய் வரை கட்டணம் கட்ட வேண்டிய நிலையை உருவாக்கி விட்டார்கள். ஆன  நம்முடைய முதல்&அமைச்சர்,   மக்கள் பாதிக்காத வகையில் இன்றைக்கு 150 ரூபாய்க்கு தமிழக அரசு கேபிள் சேவை வழங்கி வருகிறார். நீங்க எல்லாம் ஒற்றுமையாக சேர்ந்து போட்ட நிச்சயம்    வெற்றி பெறலாம் .அந்த வெற்றியையும் நீங்கள் பெற்றுத் தரவேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள். இத்தொகுதிக்கு   இந்த தேர்தலில் அவிநாசி& அத்திக்கடவு திட்டத்திலிருந்து காலேஜில் இருந்து, குடிநீர் திட்டத்தில் இருந்து, வீடுகள் கட்டுவதில் இருந்து இன்னும்  கூட எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்து இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நீங்கள் சிறப்பாக பணியாற்றி வந்த 100 சதவீத வெற்றியே இலக்கு என்பதை நம் அடைந்தே தீரவேண்டும். திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட நான்கு தொகுதிகள் அவிநாசி திருப்பூர் வடக்கு திருப்பூர் தெற்கு பல்லடம் இப்படி நான்கு தொகுதிகளிலும் 100 சதவீத வெற்றியை பெற்று  உள்ளாட்சித் தேர்தலிலும் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்று, நம்முடைய தலைமைக்கு, 'என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திருப்பூர் மாநகர் மாவட்டம் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.  இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.


இதில் அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கருப்பசாமி, பிரேமா ராமன் , பி.கே.முத்து, சண்முகசுந்தரம், நீதிராஜன், ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


Previous Post Next Post