கடலூரில் பரோடா விவசாயிகள் கடன் வழங்கும் விழா

கடலூரில் பரோடா விவசாயிகள் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

 


 

கடலூரில் பரோடா வங்கியில் விவசாயம் தினத்தை முன்னிட்டு மாபெரும் கடன் வழங்கும் விழா கடலூர் சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கடன் வழங்கும் விழாவிற்கு வேளாண்மை இணை இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். பொது மேலாளர் பிரேந்நிரகுமார், மண்டல பொது மேலாளர் ராமகிருஷ்ணன், பிராந்திய மேலாளர் ராமாயனுஜ் ஷர்மா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 


 

இந்த நிகழ்ச்சியில் நபார்டு வங்கி அரிகரபுத்திரன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ராஜாமணி ,கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர் வெங்கடாஜலபதி, வேளாண்மை உதவி இயக்குனர் எஸ். பூவராகவன், இந்தியன் வங்கி எல்டிஎம் ஜோதிமணி,கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் குபேந்திரன், மற்றும் குணசேகரன், ரமேஷ், பழனிவேல், ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த கடன் வழங்கும் விழாவில் 142 பயனாளிகளுக்கு 16 புள்ளி 42 கோடி கடன் வழங்கப்பட்டது. மேலும் பரோடா வங்கியில் கடன் பெற்று குறிப்பிட்ட காலத்தில் செலுத்திய 15 பயனாளிகளுக்கு பொன்னாடை மற்றும் கேடயம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.  முடிவில் கடலூர் கிளை மேலாளர் நன்றி கூறினார்.

Previous Post Next Post