சின்ன காரைக்காடு மற்றும் மாவடி பாளையத்தில் கோமாரி தடுப்பூசி முகாம்

சின்ன காரைக்காடு மற்றும் மாவடி பாளையத்தில் கோமாரி தடுப்பூசி முகாம்.

 


 

கடலூர் மாவட்டத்தில் 17 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 14. 10.19 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச் சியாக இன்று கடலூர் மாவட்டத்தில் 8000 கால்நடைகளுக்கு தடுப்பூசி மேற்கொள்ளப்பட்டது.

 


 

மண்டல இணை இயக்குநர் மரு.கே.குபேந்திரன் மற்றும் உதவி இயக்குநர் மரு.இராஜேஸ்குமார் ஆகியோர் சின்ன காரைக்காடு மற்றும் மாவடிபாளையம் ஆகிய கிராமங்களில் தடுப்பூசி பணி யினை ஆய்வு செய்தனர். மரு.சூசை மரி நிக்சன், மரு.ஸ்டாலின் வேதமாணிக்கம் கால்நடை ஆய்வாளர் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முகாமில் பணிபுரிந்தனர்.

Previous Post Next Post