கடலூர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில்  டெங்கு விழிப்புணர்வு முகாம்
கடலூர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில்  டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .

 


 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர பொறுப்பாளர் தியாக ரத்தினராஜன் தலைமையில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. டெங்கு விழிப்புணர்வு முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் அக்ரி முருகேசன் கலந்துகொண்டு விருத்தாசலம் பாலக்கரையில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் துண்டு பிரச்சாரம்  வழங்கினார். 

 


 

இதில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளரும், நகர கழக பொறுப்பாளருமான தியாக.ரத்தினராஜன், அவைத் தலைவர் பாரதி, செல்வகுமார், சந்தானம், முருகன், வசந்த், சரத், வடிவேல், சங்கர், ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார், மதியரசன், இளங்கோவன், சக்கரபாணி, இளவரசன், மகளிரணி விஜயா குணசேகரன், வளர்மதி, கொளஞ்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


 

  

Previous Post Next Post