சீர்காழியில் ஆக்கிரமிப்பு ஆவின் பூத்களை அகற்றாமல் விட்டால் போராட்டம் நடத்தப்படும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் சீர்காழி வட்ட தலைவர் அறிக்கை

சீர்காழியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
ஆவின் பூத்களை அகற்றாமல் விட்டால் போராட்டம் நடத்தப்படும்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் 
சீர்காழி வட்ட தலைவர் அறிக்கை விடுத்துள்ளார்.


நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி நகரத்தில் பொது மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு வர்த்தகர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். நெடுஞ்சாலைதுறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீர்காழி நகர வர்த்தகர் சங்கம் வரும் தீபாவளி பண்டிகை வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என்று கால அவகசாம் கேட்டுள்ளது. தீபாவளிக்கு பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் சீர்காழி வட்ட தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நம் சீர்காழி பகுதியில் மிகவும் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூராக இருப்பதாக கடந்த இருபத்து ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நில ஆர்ஜிதங்கள் மூலம் சாலைகள் அகலப்படுத்தப்பட்டது. போக்குவரத்து இடையூறுகள் குறைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் சீர்காழி கடைவீதி பகுதிகள் சாலையின் இரண்டு பக்கமும், பக்கத்திற்கு 15 அடிவீதம் சுமார் 30 அடிக்கு மேல் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சாலையில் பொதுமக்கள் விபத்துக்களில் சிக்கி சாகும் நிலையை ஏற்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களும், அன்றாடம் பிரச்சனைகளை தேடி போராடும், பொதுநல அன்பர்களும், குறைந்து வரும் சூழ்நிலையால் வியாபாரிகளை கேட்பதற்கு அஞ்சி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மூத்தக் குடிமக்கள் சாலையில் செல்லும் போது நம் ஒவ்வொருவரின் உயிர்களும் காலம் வரும் வரை பாதுகாத்துக் கொள்வது அவரவர் கடமையாகக் கொள்ள வேண்டும். மேலும் சீர்காழியில் சாலையோரம் ஆவின் பூத்கள் ஆக்கிரமித்துள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது தனியார் ஏஜென்டுகளால் நடத்தப்படும் ஆவின் பூத் கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். ஆவின் பூத்களால் போக்குவரத்துக்கு இடைஞ்சல், பாதசாரிகள் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆவின் பூத்களை அகற்றாமல் விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.


Previous Post Next Post