பருவ மழை நெருங்குவதால் போர்க்கால அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையை துவங்க வேண்டும் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

பருவ மழை நெருங்குவதால் போர்க்கால அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையை துவங்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்.




பருவ மழை நெருங்குவதால் போர்க்கால அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையை துவங்க வேண்டும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமத்தில் கொள்ளிடம் கிழக்கு வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது. கிழக்கு வட்டார தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் பாண்டியன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சிவராமன்இ மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர்இ மாவட்ட விவசாய சங்க செயலாளர் மணிதேவர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டு பேசுகையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியின் வெற்றிக்கு தொண்டர்கள் பெரிதும் பாடுபட வேண்டும் என்றார். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் வெற்றிக்கு பூத் கமிட்டி உறுப்பினர்கள் அதிக ஈடுப்பாட்டுடன் கிராமங்கள் தோறும் செயல்பட வேண்டும் கொள்ளிடம் கடைமடைப் பகுதிக்கு தடையின்றி பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும். தற்பொழுது மழைக்காலம் நெருங்குவதால் அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையை துவங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. த.ம.மு. கழக மாநில செயலாளர் முசாவூதீன்இ மேற்கு வட்டார தலைவர் ஞானசம்மந்தம்இ முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்கையன்இ அன்பழகன்இ நகர செயலாளர்கள் ராமானுஜம்இ கேசவன்இ மாவட்ட எஸ்.சி எஸ்.டி பிரிவு தலைவர் ராமு மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார். 


Previous Post Next Post