தேசிய உடல் காய தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

பழனி அரசு மருத்துவமனையில் தேசிய உடல் காய தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.பழனி அரசு மருத்துவமனையில் தேசிய உடல் காய தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நோயாளிகள் உடம்பில் காயங்கள் ஏற்படும் பொழுது எவ்வாறு முதலுதவி செய்வது. காயங்களுக்கு எப்படி மருந்துகள் போடுவது. காயம் ஆறும் வரை நோயாளிகளை எப்படி பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை உறுதிமொழியாக எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் சிறப்பு செவிலியர்கள் அலுவலக ஊழியர்கள் பாதுகாப்பு செக்யூரிட்டிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்..