திருப்பூரில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று டெங்கு ஒழிப்பு தினம்

வாரந்தோறும் வியாழக்கிழமையன்று டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 


  


தமிழ்நாடு அரசு உத்தரவின்படி திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக வாரந்தோறும் வியாழக்கிழமையன்று டெங்கு ஒழிப்பு தினமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி  மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், குடிநீரில் கொசுப்புழுக்கள் உருவாகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், டெங்கு கொசு உற்பத்திக்கு  உறுதுணையாக  இருக்கும் கட்டிடங்களுக்கு  உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அபராதம் விதிக்கப்படும். டெங்கு கொசு  உருவாகும்  இடங்களான கழிவுநீர், குடிநீர் தொட்டிகள், பயன்பாடற்ற பானைகள், உரல்கள், பழைய டயர், தேங்காய் மட்டைகள் ஆகியவற்றை கண்டறிந்து நீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும். மழைநீர் தேங்கும் இடங்களான பாறைக்குழிகள் போன்ற இடங்களில் மணல் போட்டு சமன் செய்யவும் அல்லது அவ்வாறு செய்ய இயலாத இடங்களில் ஆயில்பால் ஊற்றி கொசுப்புழு உருவாகாதவாறு தடுக்க வேண்டும். அனைத்து உள்ளாட்சி பகுதிகளுக்கும் சுகாதாரமான குளோரினேசன் செய்த  குடிநீர்  வழங்க அறிவுறுத்தப்பட்டது. ஊராட்சிகளில்  பிளிச்சிங் பவுடர், குளோரின் பவுடர், டெமோபாஸ், பினாயில், பைரத்திரம் ஆகியவை போதிய அளவு இருப்பில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அனைத்து குக்கிராமங்களிலும் புகை மூட்ட மருந்து  (Fogging) அடிக்கப்பட வேண்டும் எனவும், ஒட்டு மொத்த தூய்மை பணி (Mass Cleaning) மேற்கொள்ள  வேண்டும். டெங்கு கொசுப்புழு பணியாளர்கள் பணியிடங்களுக்கு வரும்பொழுது பொது மக்கள் அனைவரும்; உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கைக்கு பொது மக்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும். கொசு புழுக்கள் கண்டறியப்படும் வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு  கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். மேலும் குடிநீர் இணைப்பு மற்றும் மின்இணைப்பு துண்டிக்கப்படும். அதையும்மீறி கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காத நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
   


Previous Post Next Post