கடலூரில்  உலக கை கழுவும் தினவிழா

கடலூரில் 

உலக கை கழுவும் தினவிழா கொண்டாடப்பட்டது. 

 


 

கடலூர் பாதிரிக்குப்பம் குளோரி தொடக்கப்பள்ளியில் உலக கை கழுவும் தின விழா கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக நேற்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்கத்தின் தலைவர்எஸ். ராமலிங்கம் தலைமை தாங்கினார். 

செயலாளர் தட்சணாமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக  ரோட்டரி துணை ஆளுநர் பி அப்பர் சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

 

உலக கை கழுவும் தின விழாவில் மாணவ மாணவிகளுக்கு கூத்தப்பாக்கம் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் வி .எஸ். வசந்தகுமார் செய்முறை விளக்கப் பயிற்சி அளித்தார்.  இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் ராதாகிருஷ்ணன் தாயுமானவன் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியில் கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்க நிர்வாகி 

எஸ். பாஸ்கரன் நன்றி கூறினார்.

 

 

 

Previous Post Next Post