வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 1 வயது பச்சிளம் பெண் குழந்தை உட்பட 3 பேர் பலி

கடலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 1 வயது பச்சிளம் பெண் குழந்தை உட்பட 3 பேர் பலி - படுகாயங்களுடன் மூன்று பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

 


 

கடலூர் திருப்பாதிபுலியூர், கம்மியம்பேட்டை பகுதி சுசிலா நகர் ரயிஸ்மில் தெரு பகுதியை சேர்வர் நாராயணன் என்பவர் தனது மனைவி மாலா மற்றும் மருமகள் மகேஷ்வரி பேத்தி தனஶ்ரீ,யுவஶ்ரீ,உட்பட 6 பேர் சிமென்ட் ஷீட் பொருத்திய ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

 


 

இந்நிலையில் இன்று இரவு பெய்த தொடர் மழையில் சுவர் ஊறி வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பச்சிளம் பெண் குழந்தை தனஶ்ரீ மற்றும் மாலா,மகேஷ்வரி ஆகிய 3 பேர் உயிர் இழந்தனர், 

 


 

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் இடிந்து விழுந்து கிடந்த சுவற்றை அப்புறப்படுத்தி சுவற்றின் அடியிலிருந்த நாராயணன் ரஞ்சிதா யுவஸ்ரீ ஆகிய மூன்று பேரை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மாலா ,மகேஸ்வரி ,தனுஸ்ரீ ஆகியோரின் உடல்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் அனுப்பிவைத்தனர். அதிகாலை 2 மணிக்கு நடைபெற்ற  இந்த கோரச் சம்பவம் அப் பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.