திருப்பூர் தெற்கு தொகுதியில்  ரூ.1.71 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள்  எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார்

திருப்பூர் தெற்கு தொகுதியில்  ரூ.1.71 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள் 

எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார். 

 


 

திருப்பூர் மாநகராட்சியில் பெரியகடைவீதி, செரங்காடு, பொன் நகர்,  உள்ளிட்ட  பகுதிகளில் 1.71 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப்பணிகள், கட்டிடங்கள் திறப்பு உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார்.


திருப்பூர் மாநகராட்சி 44 வது வார்டு கே.ஜி., கார்டன் பகுதியில் தெற்கு எம்.எல்.ஏ., நிதி, ரூ.16.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை ஆகியவற்றை திருப்பூர் தெற்கு எம்,எல்.ஏ., சு.குணசேகரன் திறந்து வைத்தார்.இதே போல 44, 44 வது வார்டுகளுக்குட்பட்ட பெரியக்கடை வீதியில் ரூ.80 லட்சம் மதிப்பில்  மறு தார்த்தளம் அமைக்கும் பணிகள், மழைநீர் வடிகால் காட்டும் பணிகளை எம்.எல்.ஏ., சு.குணசேகரன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.39 வது வார்டுக்குட்பட்ட பொன் நகர் குறுக்கு வீதிகளில் ரூ.39.30 லட்சம் மதிப்பில் தார் ரோடு புதுப்பிக்கும் பணிகளையம், 49 வது வார்டு பகுதியில் உள்ள செரங்காடு 2 வது வீதி, மற்றும் குறுக்கு வீதிகளில் ரூ.35 லட்சம் மதிப்பில் தார்த் தளம் புதுப்பிக்கும் பணிகளையம் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார். இதில் உதவி ஆணையர் சபியுல்லா, உதவி பொறியாளர் கனகராஜ், அர்பன் பாங்க் தலைவர் சடையப்பன், முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன், கண்ணபிரான், சாகுல் ஹமீது உள்பட பலர் பங்கேற்றனர்.