கொள்ளிடம்  ஒன்றிய  தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் தலைமையில் 300 பேர் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி அ.தி.மு.கவில் ஐக்கியம்

கொள்ளிடம்  ஒன்றிய  தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் தலைமையில் 300 பேர் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி அ.தி.மு.கவில் ஐக்கியம்



கொள்ளிடம் ஒன்றிய தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் தலைமையில் 300 பேர் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்தவர். ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ். இவர் தலைமையில் பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி சீர்காழி எம்.எல்.ஏ பாரதி தலைமையில் ஒன்றிய செயலாளர் நற்குணன் முன்னிலையில் கொள்ளிடத்தில் நடைபெற்ற விழாவில் 300 க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.கவில் இணைந்தனர். முன்னதாக கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலிலிருந்து அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் மாற்றுக்கட்சியினர் மேளதாளம் முழங்க ஊர்வலமாகச் சென்று கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து பிறகு அ.தி.மு.கவில் இணைந்தனர். பின்னர் அவர்கள் அ.தி.மு.க வில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். சீர்காழி தொகுதி இணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மீனவரணி செயலாளர் நாகரத்தினம், பேருர் கழக செயலாளர் போகர்ரவி, ஒன்றிய பொருளாளர் பாலதண்டாயுதம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தநடராஜன், ஒன்றிய பேரவை துணைச் செயலாளர் சொக்கலிங்கம், கொள்ளிடம் நகர செயலாளர் சம்மந்தம், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செந்தில், கூட்டுறவு வங்கித்தலைவர்கள் கருணாகரன், சாமிசெல்வராஜ், ரகு மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.


Previous Post Next Post