நத்தம் அருகே 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது


நத்தம் அருகே 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது  

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோவில்பட்டியைச்  சேர்ந்தவர் கணேசன், (36).கூலித்தொழிலாளி. இவரது மனைவி சீத்தாலெட்சுமி(31).நேற்று  சீத்தாலெட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக  நத்தம் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சத்திரப்பட்டி பகுதியில் சென்ற போது  பிரசவ வலி அதிகரித்ததும் வேனில் வந்த  மருத்துவ உதவியாளர் சேகர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் வண்டியை நிறுத்தி ஆம்புலன்சிற்குள்ளேயே பிரசவம் பார்த்தனர். அப்போது அழகான பெண் குழந்தை ஒன்று சீத்தாலெட்சுமிக்கு பிறந்தது.தாயும், குழந்தையும் காஞ்சரம்பேட்டை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்..