முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் மண்டலத்தில்நடைபெற்ற நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.94 முதல் 100 வரை மதுக்கரை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலும், வார்டு எண்.92 சுகுணாபுரம் மைல்கல் பகுதியிலும், வார்டு எண்.91, 92-க்குட்பட்ட நரசிம்புரத்திலும் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள்
வழங்கும் விழாக்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.இவ்விழாக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி  தலைமை வகித்தார்.
மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரை முருகன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.சண்முகம் அவர்கள்,வி.பி.கந்தசாமி அவர்கள்,
கஸ்தூரி வாசு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் நன்றி கூறினார்கள். இவ்விழாக்களில், வார்டு எண். 94 முதல் 100-ல் 111 பேருக்கும், வார்டு எண்.92 பி.கே.புதூரில் 3 பேருக்கும், வார்டு எண்.92 நரசிம்மபுரத்தில் 10 பேருக்கும் ஆகமொத்தம் 124 பேருக்கு அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு அனுமதி உத்தரவுகளையும், வார்டு எண். 94 முதல் 100-ல் 17 பேருக்கும், வார்டு எண்.92 பி.கே.புதூரில் 12 பேருக்கும், ஆகமொத்தம் 29 பேருக்கு புதிய குடிநீர் இணைப்புக்கான உத்தரவுகளையும், வார்டு எண்.92 பி.கே.புதூரில் 17 பேருக்கு சொத்துவரி பெயர் மாற்ற உத்தரவுகளையும் ஆகமொத்தம் 170 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர். எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், தெற்குமண்டல உதவி ஆணையர் டி.ஆர்.ரவி, செயற்பொறியாளர் ஞானவேல் அவர்கள், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள