அ.ம.மு.க சார்பில் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை  வருகின்ற 29 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை இன்று முதல் வருகின்ற 29 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் கழக சார்பில் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை இன்று முதல் வருகின்ற 29 ஆம் தேதி வரை பெறவேண்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ அவர்கள் ஆணைக்கிணங்க பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற படிவங்கள் வழங்கும் விழாவில் கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு செந்தமிழன் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் கரிகாலன் ஆகியோரும் கழக உறுப்பினர்களுக்கு ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு படிவங்கள் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் தாம்பரம் நாராயணன் பகுதி செயலாளர்கள் ஆலந்தூர் லட்சுமிபதி மடிப்பாக்கம் ராஜேந்திரன் செம்மஞ்சேரி குணசேகரன் ஒன்றிய கழக செயலாளர் காளிதாஸ் நகரக் கழகச் செயலாளர்கள் தாம்பரம் கிருஷ்ணமூர்த்தி  பம்மல் ஜெய கோபி அனகாபுத்தூர் பிரகாஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்