பவானி கோவில் யானை மரணம்: பொதுமக்கள் பாசப்போராட்டம்


பவானி கோவில் யானை மரணம்: பொதுமக்கள் பாசப்போராட்டம்



 



பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானை நோய்வாய்ப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றது இதன் காரணமாக கடந்த சில நாட்களாக உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாததால் அசதியில் சோர்வுற்று இருப்பதால்  பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

 


சங்கமேஸ்வரர் கோவில் யானை.

 

யானை வேதநாயகி யானை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பவானி குமாரபாளையம் பொதுமக்களால் விலைக்கு வாங்கப்பட்டு  கோவிலுக்கு நன்கொடையாகவழங்கப்பட்டது 

அதனைத்தொடர்ந்து திருவிழாக்கள் மற்றும் திருவீதி உலாவுக்கும் இந்த யானை உற்சவ மூர்த்திகளை சுமந்து வளம் வந்த இந்த யானைக்கு வேதநாயகி எனப் பெயரிட்டு வளர்க்கப்பட்டு வந்தது இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக வேதநாயகி யானை நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில்  யானைகளின் சிறப்பு மருத்துவர் டாக்டர் மனோகரன் அவர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் கோவையில் இருந்து வந்து சிறப்பு சிகிச்சை அளித்து வந்தனர் .

 


 

இந்நிலையில் யானை  இன்று அதிகாலை 05.10 மணிக்கு  இறந்துவிட்டது.தகவலறிந்த பொதுமக்கள் இறந்து போன வேதநாயகிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.மேலும் இன்று காலை 1,மணியளவில் கோவிலுக்கு பக்கவாட்டில் உள்ள பைக் ஸ்டேண்டு அருகே உள்ள காலி இடத்தில் வேதநாயகி அடக்கம் செய்ய பவானியில் உள்ள தேரடி வீதியில் யானை வேதநாயகி லாரியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர் அதைத்தொடர்ந்து அடக்கம் செய்தனர். கோவில் யானை இறந்ததால் இன்று நடை சாத்தப்பட்டுள்ளது. அடக்கம் செய்த பிறகு கோவில் சுத்தம் செய்யப்பட்டு மாலை நடை திறக்கப்படும் இதனால் சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்கள் தரிசனம் செய்யமுடியாமல் செல்கின்றனர். 

Previous Post Next Post