சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி கோ பூஜை

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி கோ பூஜை நடைபெற்றது.
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி கோ பூஜை வழிபாடு நடைப்பெற்றது. இதையொட்டி கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை காட்டப் பட்டது. தொடாந்து கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு, கன்றுக்கு வஸ்திரம், மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காடட்ப்படட்து. பசு, கன்று மீது பக்தர்கள் மஞ்சள், குங்குமம் வைத்து மலர்கள் தூவி வணங்கி வழிப்பட்டனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் பசு, கன்றுகளுடன் பக்தர்கள் கோயில் பிராகாரத்தை வலம் வந்தனர். இதில் சிறப்பு விருந்தினராக இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோ பூஜை வழிபாட்டுக்குழு பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர்.