மரம் வளர்ப்பு, பாதுகாப்பு குறித்து ஒருநாள் பயிற்சி பட்டரை முகாம்

வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கம் சார்பில் மரம் வளர்ப்பு, பாதுகாப்பு குறித்து ஒருநாள் பயிற்சி பட்டரை முகாம்.

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி ஸ்ரீ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கம் சார்பில் மரம் வளர்ப்பு, இயற்கை விவசாயம், மற்றும் நீர் நிலை பாதுகாப்பு குறித்து பயிற்சிப் பட்டறை முகாம் நடைபெற்றது. வெல்லிங்டன்  நீர் தேக்க பாசனம் சிறு குறு விவசாயிகள் சங்கம் தலைவர் தயா. பேரின்பம் தலைமை தாங்கினார். பொருளாளர் பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார்.

 

சிறப்பு அழைப்பாளராக மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர் முனைவர் முத்து சுவாமி, தஞ்சாவூர் முன்னோடி விவசாயி பாலசுப்பிரமணியன், ஸ்ரீ ஞான குரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனர் கோடி ஆகியோர் கலந்துகொண்டு இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு,மற்றும் நீர் நிலை பாதுகாப்பு குறித்து பயிற்சி வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில்  துணை செயலாளர் பழனிச்சாமி, குருசாமி, கிளை நிர்வாகிகள் வீரராஜன், கலியன் ,செல்வம், ஆறுமுகம், அஞ்சாப்புலி, கருப்பையா, மற்றும் முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.