வேப்பூர் அருகே சேப்பாக்கம் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி. 

வேப்பூர் அருகிலுள்ள சேப்பாக்கம் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

 


 

நிகழ்ச்சிக்கு  பள்ளி தலைமை ஆசிரியர் ஞானஜோதி தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர். இளநிலை பூச்சியியல் வல்லுநர் ராஜசேகர் டெங்கு கொசுவை தடுக்கும் வழிமுறைகள், நிலவேம்பு கசாயம்,  பப்பாளி இலையின் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். பின்னர், பி.டி.ஓ., காமராஜ் உத்தரவை தொடர்ந்து, ஊராட்சியில் சுகாதார பராமரிப்பு பணிகள் செய்து, தெருக்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் ஊராட்சி செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.