திருப்பூரில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைப்பழம் பறிமுதல்

திருப்பூரில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைப்பழம் பறிமுதல்.

 


 

திருப்பூர் தென்னம் பாளையம் மார்கெட் பகுதியில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழம் விற்பனை செய்யப்படுவதாகவும் அங்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் விஜய கார்த்திகேயன் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய் லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.

 


 

அப்போது கோபியை சேர்ந்த ராசு என்பவரது கிடங்கில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைப்பழம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.