திருவண்ணாமலை கோ-ஆப்டெக்ஸில் புத்தாண்டு, பொங்கல் சிறப்பு தள்ளுபடி

திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர தெருவிலுள்ள கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. இதுகுறித்து கோஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்காக 30 சதவித தள்ளுபடி அரசு வழங்கியுள்ளது. இதற்கென புதிய ரக ஜவுளிகள் விற்பனைக்காக வந்துள்ளன. எங்கள் விற்பனை நிலையத்தில் காஞ்சிபுரம், ஆரணி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய ஊர்களில் கைத்தேர்ந்த நெசவாளர்களை கொண்டு தூய பட்டு நூலால் நெய்யப்பட்ட பட்டு சேலைகள் விற்பனைக்காக வந்துள்ளன. ரூ.2800 தொடங்கி ரூ. 60,000 வரை தூய வெள்ளி ஜரிகையுடன் கூடிய நவீன ரக பட்டு சேலைகள் கல் பதித்த பட்டு சேலைகள் மென்பட்டு சேலைகள் உள்ளன. மேலும் திண்டுக்கல் கோவை வதமசசேரி, திருச்சி, மணமேடு ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட காட்டன் சேலைகள் ஆர்கானிக் சேலைகள் கோரா காட்டன் சேலைகள் மற்றும் லுங்கிகள் போர்வைகள் திரைச்சீலைகள் துண்டுகள் கைக்குட்டைகள் வேட்டிகள் ரெடிமேட் சட்டைகள் இருப்பு உள்ளன. இவை அனைத்துக்கும் 30 சதவித தள்ளுபடி வழங்கப்படும். பண்டிகை தினத்தையட்டி விடுமுறை இல்லாமல் விற்பனை நிலையம் திறந்தே இருக்கும். அரசு ஊழியர்களுக்கு கடன் வசதியும் உண்டு என்றார்.