தூத்துக்குடி மாவட்டத்தில் 7,22,407 ஆண்கள், 6,95,726 பெண்கள் உட்பட 14,18,245 பேர் வாக்காளர்கள் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் 7,22,407 ஆண்கள், 6,95,726 பெண்கள் உட்பட 14,18,245 பேர் வாக்காளர்கள் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

 


 

வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்த 2020 பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகள் முன்னியிலையில் மாவட்ட ஆட்சி தலைவரும் மாவட்ட தேர்தல் அலவலருமான சந்தீப் நந்துரி இன்று வெளியிட்டார். 

 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- 

"கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பெயர் சேர்த்தல் திருத்தம், நீக்கம் மேற்கொள்ளப்பட்டதில் பத்தாயிரத்து 99 பேர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 7,22,407 ஆண்கள், 6,95,726 பெண்கள் உட்பட 14,18,245 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

 

மாவட்டத்தில் பத்தாயிரத்து 505 பேர் மாற்று திறனாளிகளாக வரைவு வாக்காளர் பட்டியலில் குறியீடு செய்யபட்டுள்ளனர். திருநங்கைகள் 112 பேர் இடம் பெற்றுள்ளனர்.  மாவட்டத்தில் ஒட்டப்பிடரம் தொகுதியில் ஒரு வாக்கு சாவடி, தூத்துக்குடி தொகுதியில் 2 வாக்கு சாவடியும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது . வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க,நீக்க,முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்வதற்காக 2020 ஜனவரி 4,5,11 மற்றும் 12 ஆம் தேதிகளில் அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் எனக் கூறினார்.