உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்" -

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், அழைப்பு

 


 

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வருமாறு முன்னாள் ராணுவ படை வீரர்கள் நல அலுவலகம் மூலமாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், கேட்டுக்கொண்டுள்ளார். வருகிற 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திடகாத்திரமுள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 

இப்பணியில் முன்னாள் படைவீரர்கள் இரு கட்டங்களாக பணி அமர்த்தப்படுவார்கள். முதற்கட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வருபவர்கள் 26.12.2019 மற்றும் 27.12.2019 ஆகிய இரு நாட்களும், இரண்டாம் கட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வருபவர்கள் 29.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய இரு நாட்களும் பணியாற்றுவார்கள். இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட விருப்பமுள்ள காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் (சீருடை கட்டாயமில்லை) தங்களது அசல் படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் முதற்கட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

இப்பணிக்காக மதிப்பூதியம் மற்றும் தினசரி உணவுப்படி அரசால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் தங்களுக்கு வழங்கப்படும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தையோ தொலைபேசி எண் 0461 - 2902025 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும்,

முதற்கட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வருபவர்கள் 26.12.2019 அன்று காலை 07.30 மணிக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் பணிக்கு வருபவர்கள் 29.12.2019 அன்று காலை 07.30 மணிக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாக மைதானத்தில் தவறாது ஆஜராகுமாறு முன்னாள் ராணுவ வீரர்கள் நல அலுவலகம் மூலமாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், கேட்டுக் கொண்டுள்ளார்.