சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான சாதாரண தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு 8ஊராட்சி ஒன்றியங்களில் வருகின்ற 30 வருகின்ற 30 வருகின்ற 30.12.2019 .12.2019. திங்கட்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு துவங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. 



சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டினம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் மற்றும் கெங்கவல்லி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குச்சாவடி பொருட்களை பிரித்து வைக்கும் பணியினையும், வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன் இன்று (28.12.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
சி.அ.ராமன் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும்
அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி தெரிவித்ததாவது. சேலம் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு சாதாரண தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நேற்றைய தினம் 27.12.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியாப்பட்டினம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல் மற்றும் வாழப்பாடி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் சாதாரண தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 30.12.2019 திங்கட்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு துவங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. ஊரக உள்ளாட்சிக்கான சாதாரண தேர்தலுக்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் இத்தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.



அதேபோல் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு பெட்டி வைப்பதற்கு தேவையான பாதுகாப்பு அறைகளை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் அறையும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் அறையும், கிராம ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் அறையினையும் தனித்தனியாக அமைத்திட வேண்டும்.  மேலும், இத்தேர்தல் சிறப்பாக நடைபெறுவதற்கு தேவையான அனைத்து பணிகளையும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் நுண் பார்வையாளர்கள் மூலமும், வெப் கேமிராக்கள்  பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.


இரண்டாம் கட்ட தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் முழுமையாக
மேற்கொள்ளப்பட்டுள்ளன.இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகளை பாதுகாப்பாக வைப்பதற்கு 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் 8 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வாக்கு பதிவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.


வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து 100 சதவிகித ஜனநாயக கடமையை
நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சி.அ.ராமன், அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார். இன்றைய தினம் சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் வாழப்பாடி மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திலும், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் பெத்தநாயக்கன்பாளையம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திலும், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,


ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஆத்தூர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திலும், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் கெங்கவல்லி ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையம் மற்றும் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் தலைவாசல் மணிவிழுந்தான் தெற்கு, மாருதி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினையும் சி.அ.ராமன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.



Previous Post Next Post