மாவட்ட, மாநில, தேசிய யோகாசன போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

மாவட்ட, மாநில, தேசிய யோகாசன போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா கோபி அருகே உள்ள ஜான் ஆர்தர் பள்ளியில் நடைபெற்றது.

 


 

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ஜான் ஆர்தர் பள்ளியில் ஈரோடு மாவட்ட யோகாசன சங்கம் மற்றும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக மாவட்ட, மாநில, தேசிய யோகாசன போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது. தேசிய அளவில் ( ஜெய்ப்பூர்- ராஜஸ்தான்) மூன்றாம் இடம் பிடித்த தருண் குமார், மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்ற ஸ்ரீஹரிவர்ஷன், மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற தீபக் ,மூன்றாம் பரிசு பெற்ற விமல் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி த.ஆ செந்தில் , கல்வியாளர் செல்வராஜ், மனோகர் நல்லாசிரியர், ஸ்ரீஹரி (தே.ஆ.ச) இ.டி.ஒய்.எஸ் தலைவர் துரைராஜ் , இயற்கைமருத்துவர் சிவசங்கரி உட்பட 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் ஊக்கப்பரிசுகளும் கொடுக்கப்பட்டது.