9 ஆண்டுகளாகத் திறக்கப்படாத நூலகம்

9 ஆண்டுகளாகத் திறக்கப்படாத நூலகம்.

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா கல்லூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் பயன்படும் வகையில் கடந்த 2010 -2011ம்   ஆண்டு ரூ 3.65 லட்சம் மதிப்பில் புதிதாக நூலகம் கட்டடம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட நாளிலிருந்து இதுவரை ஒன்பது ஆண்டுகள் ஆகியும் நூலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் நூலகம் கட்டிடங்களை சுற்றி செடி கொடி ஆகியவை சூழ்ந்துள்ளது. மேலும் இந்த நூலகத்துக்காக ஒதுக்கப்பட்ட புத்தகங்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற செயலர் சுப்பிரமணியன் இடம் சென்று கேட்ட பொழுது திறப்பதாக கூறியிருந்தார் ஆனால் இதுநாள் வரை அவர் அதைத் திறப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பூட்டியே கிடக்கும் நூலகத்தை மக்கள் பயன்பட்டிருக்கிறது உடனே திறந்துவிட வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.