திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகைதீபத்திருவிழா கடந்த 10ம் தேதி கொண்டாடப் பட்டது.அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணிதீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்பட்டது. இதைக்காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர். இந்நிலையில் தீபம் முடிந்தும் அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் குறைய வில்லை. தினமும் கார், பஸ், வேன்களில் பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் தினமும் அலை மோதுகிறது. இந்நிலையில்  விடுமுறை தினமான நேற்றும் அண்ணாமலையார் கோயிலில் கட்டண தரிசனம், பொது தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து 14 கி.மீ. தூரமுள்ள கிரிவலப் பாதையில் அஷ்டலிங்கங்களையும் வழிபட்டதோடு திருநேர் அண்ணாமலை, ஆதிஅருணாசலேஸ்வரர் ஆகிய சன்னதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர்.



Previous Post Next Post