வேட்டி வாரத்தை முன்னிட்டு ராம்ராஜின் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி சட்டைகள் சலுகை விலையில்  

2020ம் ஆண்டின் வேட்டி வாரத்தை முன்னிட்டு ராம்ராஜ் காடடன் நிறுவனம் பல வர்ண்ணங்களில் சலுகை விலையாக ரூ.1000திற்கு வேட்டி, சர்ட்டுகளை விற்பனைக்காக தயார் செய்துள்ளதாக நிர்வாக இயக்குனர் கே ஆர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

 


 

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேட்டிக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்த பெருமை ராம்ராஜ் காட்டன் வேட்டி நிறுவனத்தையே சேரும். எமது நிறுவனத்தின் புதிய ஒட்டிக்கோ கட்டிக்கோ அட்ஜஸ்டபிள் வேட்டி பார்டருக்கு  மேட்சாக அதே கலரில் சர்ட்டுகளுடன் பல வண்ணத்தில் அறிமுகப் படுத்துகிறோம். வேட்டி வாரமாக வரும் ஜனவரி 1ந்  தேதி முதல் 7ம் தேதி வரையில் கடைபிடிக்கப் படுகிறது. இந்த 2020ம் ஆண்டு புத்தாண்டில் இதை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். வேட்டி கட்டியவர்களே மதிப்பு மிக்கவர்கள் என சல்யூட் அடிக்க வைத்த சாதனை படைத்த எமது நிறுவனம் கிராமப்புற நெசவாளர்களின் வாழ்க்கை மேம்பட செய்ய தொடர்ந்து செயல்பட்டு, மகாத்மாகாந்தி கண்ட கனவை நனவாக்கிட அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் வண்ணம் ஆராய்ச்சிகள் பல செய்து புதிய பல ரகங்களை அறிமுகப்படுத்திய  வண்ணம் தனித்துவம் மிக்க உடையாக வேட்டியையும் அதன் விற்பனையையும்தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்.

 


 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளிலிருந்து, 16 வயது வரையிலான குழந்தைகள் அணியும்படி அறிமுகபடுத்தப்பட்ட லிட்டில் ஸ்டார் வேஷ்டி சட்டைகள் மிக பெரிய வரவேற்பை பெற்றதோடு இந்திய தேசிய பாரம்பரியத்தில்  மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் படியாக அமைந்தது.  தொடர்ந்து அடுத்த ஆண்டு இளைஞர்கள் எளிமையாக பாரம்பரிய உடைகளை அணிந்து மகிழ ஒட்டிக்கோ கட்டிக்கோ  ஓட்டும் வேட்டிகள் அறிமுகப்படுத்தினோம் அதுவும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வேட்டி பார்டர்  மேட்ச் சர்ட்டுகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தொடர்ந்து வாடிக்கையாளர்களின் பேரார்வத்தை போற்றும்படியாக அமைந்தது.  இந்த ஆண்டும் வேட்டி வாரத்தை கொண்டாடும் வகையில் சலுகை விலையில் ரூ.1000க்கு ஜனவரி 1 முதல், 7 வரையிலான வேட்டி வாரம் 2020" வாடிக்கையாளர்களுக்கு தமிழநாட்டில் உள்ள ராம்ராஜ் காட்டன் ஷோரூம்களிலும், எங்களது அங்கீகாரம்  பெற்ற ஜவுளி கடைகளிலும்  பொங்கல் பரிசாக கிடைக்கிறது. அவர் கூறினார். பேட்டியின்போது முதன்மை செயல் அதிகாரிகள் செல்வகுமார், கணபதி மற்றும் விற்பனை பிரதிநிதிகள் உடனிருந்தனர்.