திருப்பூர் கோட்டை மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பூர் தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் அருகில் உள்ள கோட்டை மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து செல்கின்றனர்.