குடியாத்தம் அருகே மினிவேனில் செம்மரக்கட்டை கடத்திய டிரைவர் கைது

குடியாத்தம் அருகே மினிவேனில் செம்மரக்கட்டை கடத்திய டிரைவர் கைது.



வேலூர் மாவட்டம் குடியாத்தம் குடியாத்தம் டவுன் நகர காவல்நிலையத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ்குமார் திடீர் ஆய்வு செய்தார். அப்பொழுது அவர் குடியாத்தம் பகுதியில் வாகன சோதனையில் தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்பேரில் அன்று இரவு 10 மணி அளவில் குடியாத்தம் பகுதியில் நெடுஞ்சாலை வாகன சோதனையில் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் வந்த மினி  லாரி நிறுத்தாமல் டிரைவர் வேகமாக ஓட்டிச் சென்றார் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி லாரியை பின்தொடர்ந்து துரத்தி சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் குடியாத்தம் பரதராமி ரோடு சாலையில்வழி லட்சுமனபுரம் என்ற கிராம் அருகே மினி லாரியை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்



அந்த வேனில் 20 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டை பிடிபட்டது இதுகுறித்து அந்த டிரைவர் குடியாத்தம் பரசுராமபட்டியைசேர்ந்த ரவி வயது 35 என்பது தெரியவந்தது அவர் போலீசாரிடம் பள்ளிகொண்டாவில் இருந்து மினி லாரியை ஓட்டிச் சென்று வனப்பகுதியில் உள்ளவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பணத்துக்காக மினி லாரியை ஓட்டிவந்ததாகஅவர் தெரிவித்தார் இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் அவர்கள் குடியாத்தம் வனத்துறை அதிகாரி மகேந்திரன் அவர்களை வரவழைத்து 20. லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டையை அவரிடம் ஒப்படைத்தார் இதுகுறித்து செம்மரக்கட்டை கடத்தி வந்த டிரைவரை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் இதனால் குடியாத்தம்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது


Previous Post Next Post