குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி சார்பில் 108 தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி

அர்ஜுன் சம்பத் தலைமையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி சார்பில் 108 தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி

 


 

இந்து மக்கள் கட்சியின் சார்பில் இன்று தூத்துக்குடியிலுள்ள வேம்படி இசக்கியம்மன் கோயிலில் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்தும் அதற்க்கு வரவேற்பு தெரிவித்தும் 108 தேங்காய்கள் உடைத்து வழிபாடு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய குடியுரிமை சட்டம் குறித்து அவதூறு பரப்பி சாதி மத கலவரங்களை தூண்டுகின்ற திமுக கூட்டணி கட்சியினருக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் முன்னிலை வகித்தார், இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் ராம குணசீலன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள். மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.