கற்பகவர்த்தினி ஜோதிட ஆராய்ச்சி, பயிற்சி மையத்தின் சார்பில் ஜோதிட எண்கணித மென்பொருள்&செயலி அறிமுகம்

கற்பகவர்த்தினி ஜோதிட ஆராய்ச்சி, பயிற்சி மையத்தின் சார்பில் ஜோதிட எண்கணித மென்பொருள்&செயலி அறிமுகம்திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் ஏ.தொட்டிபாளையத்தில் உள்ள  கற்பகவர்த்தினி ஜோதிட ஆராய்ச்சி  மற்றும் பயிற்சி  மையத்தின் 11ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கோச்சாரமா-? திசாபுத்தியா? அறியும் சூட்சம ஜோதிட எண்கணித மென்பொருள் மற்றும் செயலி அறிமுக விழா கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள சக்திமகாலில் நடைபெற்றது. விழாவை குன்னத்தூர் பி.ஜோதிமணி பெரியசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கும்பகோணத்தை சேர்ந்த  கலைமணிகள் ஆர்.பிரவீனா, ஆர்.அபிநயா, ஈ.கயல்விழி நாச்சியார் ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.


முதல் மென்பொருளை எஸ்.பெரியசாமி&பி.ஜோதிமணி தம்பதியினர் வெளியிட்டனர். அதை பள்ளிப்பாளையம்குருஜோதிட ஆராய்ச்சியாளர் சங்ககத்தின் பி.எம்.எஸ்.பூபதிராஜன் பெற்றுக்கொண்டார். 2&வது மென்பொருளை தொட்டிபாளையம் முன்னாள் தலைவர்  எம்.பழனிசாமி&கண்ணம்மாள் வெளியிட்டனர்.  அதை அவினாசி வி.ஜோதிபிரசன்ன ஜோதிட ஆராய்ச்சியாளர் பெற்றுக்கொண்டார். 3&வது மென்பொருளை கோவை  சரவணபீடம் ஆன்மீக ஜோதிட ஆராய்சி மையத்தின் வாக்குசித்தர் முருகனடிமை சுவாமிகள் கே.பி.முருகேசன் வெளியிட அதை  திதியோக கரண ஆராய்ச்சியாளர் கே.தணிகாசலம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து  மென்பொருள் மற்றும் செயலியின் பயன்பாடு குறித்து கற்பகவர்த்தினி ஜோதி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் ஜோதிட எண்கணித ஆராய்ச்சியாளர் குன்னத்தூர் டி.கே.ராஜேந்திரன்  காணொளிகாட்சி மூலம் விளக்கி கூறினார். அப்போது ஒருவருடைய பிறந்த நாளை இந்த மென்பொருள் மற்றும் செயலியில் குறிப்பிட்டால், அவருடைய அனைத்து பலன்களும் தெரிந்து விடும் என்றும், அதற்கு ஏற்ப கோச்சாரமா காலத்தில் தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து, நன்றாக வாழ முடியும் என்றார். மேலும் தங்கள் நிறுவனத்தின் 11வது ஆண்டு விழாவையொட்டி, மென்பொருள் ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்கப்படுவதாகவும், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு அதை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.


ஜோதிடர்கள் குருபாலசுப்பிரமணி, மணிமேகலை, தினேஷ், சந்திரன், ராஜேந்திரன், எம்.எஸ்.செல்வராஜ் அருள்வாக்கு ஜோதிடர் பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். அப்போது, புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஜோதிட எண்கணித மென்பொருள் மற்றும் செயலி சாதாரண மக்களால் கூட எளிதாக பயன்படுத்தும் வகையில் உள்ளது. ஜாதகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எல்லோரும் ஜோதிடம் கற்றுகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதாக கூறினர்.