20 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்த நஞ்சப்பா பள்ளி முன்னாள் மாணவர்கள் 




20 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்த நஞ்சப்பா பள்ளி முன்னாள் மாணவர்கள் 

 


 

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2000 வது ஆண்டில் பிளஸ்2  முடித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ,நிகழ்ச்சி நடைபெற்றது. 

 


 

1998 முதல் 2000 ம் ஆண்டு வரை 11 மற்றும்  12 ம் வகுப்புகளில் 'பி' பிரிவில் படித்த மாணவர்கள் சந்தித்து தங்களது பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 20 ஆண்டுகளில் தங்களது வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றி அளவளாவினர்.

 


 

தொடர்ந்து  முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கடிகாரம் மற்றும் மின்விசிறி  வழங்கப்பட்டது.  இதை பள்ளி தலைமை ஆசிரியர் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் 'ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர்கள் பள்ளியில் சந்தித்து பள்ளி வளர்ச்சிக்கு

 


 

உதவுவது, 2000 ஆண்டில் பிளஸ் 2 முடித்து விட்டு கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு உதவுவது, ஆண்டுக்கொரு முறை ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் பிரதாப், மோகனசுந்தரம், தன்ராசு, உள்ளிட்டோர் செய்து இருந்தனர். 

 

 



 

 


 



 


Previous Post Next Post