பல்லாவரத்தில் பழமை வாய்ந்த தர்காவில் சந்தன கூடு திருவிழா

பல்லாவரத்தில் பழமை வாய்ந்த தர்காவில் சந்தன கூடு திருவிழா பல தலைமுறைகள் கடந்த பின்னும் சாதி, மத பேதமின்றி இந்து, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் பாகுபாடு இன்றி பங்கேற்ப்பு

 


 

சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரத்தில் ஹஜ்ரத் சையத் பதுருத்தீன் தர்காவில் 354-ஆம் ஆண்டு சந்தனகூடு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த தர்கா மிகவும் பழமை வாய்ந்ததாக கருதபடுகிறது. மேலும் தர்காவில் ஆண்டு தோறும் சந்தன்கூடு திருவிழாவின் போது அதனை சுற்றியுள்ள மக்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சாதி, மத பேதமின்றி  கலந்கொள்கின்றனர். தர்காவில் உள்ள சந்தனகூடு மிக நேர்த்தியாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பேண்டு வாத்தியம், தாரை தப்பட்டையுடன், இஸ்லாமிய குருமார்கர்களால் மந்திரங்கள் ஓத முக்கிய வீதிவழியாக இஸ்லாமிய பக்தி பாடல் களுடன் ஊர்வலமாக சென்றனர். சந்தனகூடு திருவிழாவின் போது ஆயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டு தர்காவில் உள்ள மகான்களின் சாமாதியை வணங்கி சென்றனர். மேலும் இங்கு தர்கா, பள்ளிவாசல், அடக்க ஸ்தலம் இவை முன்றுமே ஒரே இடத்தில இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது. திருவிழாவில் பாதுகாப்பிற்க்காக ஏராளமான போலிசார் குவிக்கபட்டுள்ளனர்.

Previous Post Next Post