பாசார் ஊராட்சி மன்ற தலைவராக விஜயா தங்கப்பன் பதவியேற்றார்

பாசார் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற விஜயா தங்கப்பன் பதவியேற்றார் 

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பாசார் ஊராட்சி மன்ற தலைவராக விஜயா தங்கப்பன் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் வழங்கினார். மேலும் வெற்றி பெற்ற விஜயா தங்கப்பன் அவர்களுக்கு பாசார் ஊராட்சியில் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு ஆகியோர் பதவி பிரமாணம்  செய்து வைத்தார்கள். உடன் ஊராட்சி மன்ற செயலாளர் சுப்பிரமணியன், துப்புரவு பணியாளர்கள்   மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.